என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேச்சு போட்டி"
- நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
கரூர்
கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023-ம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 6-ந்தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் 6-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் 6-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
மகாத்மா காந்தி பேச்சுப்போட்டிக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம்,சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளிலும்,
ஜவகர்லால் நேரு பேச்சுப்போட்டிக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவு கொள்கை ஆகிய தலைப்புகளிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணைஇயக்குனர் வழியாக இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டரால் பரிசுகள் வழங்கப்படும்.
- தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
- திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடந்தது.இதில் நடந்த பேரறிஞர் அண்ணா பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பரங்கிரி முதல் பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ரூபன் 2-வது பரிசும், திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவி வினித்தா 3-வது பரிசும், அய்யன்காளி பாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரேணுகா மற்றும் குமார்நகர் மாநகராட்சி பள்ளி மாணவி பானுப்பிரியா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வு பெற்றனர். கல்லூரி மாணவர்கள் பிரிவில் தாராபுரம் அரசு கல்லூரி மாணவர் பிரவீன் முதல் பரிசும், மாணவி தீபிகாஸ்ரீ 2-வது பரிசும், காங்கயம் அரசு கல்லூரி மாணவர் ஜெயசூர்யா 3-வது பரிசும் பெற தேர்வானார்கள்.
பின்னர் நடந்த பெரியார் பேச்சுப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மவுனிகா முதல் பரிசும், வேலம்பாளையம் ஜெய்சாரதா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜிஷப்பிரியா 2-வது பரிசும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் அன்பரசு 3-வது பரிசும், விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது அஜிம், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துஜா ஆகியோர் சிறப்பு பரிசும் பெற தேர்வானார்கள்.
கல்லூரி மாணவர்கள் பிரிவில் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவி காயத்திரி முதல் பரிசும், தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கவுதமன் 2-வது பரிசும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவி செண்பகம் 3-வது பரிசும் பெற தேர்வு செய்யப்பட்டனர்.
- சிவகங்கை அருகே குழந்தைகள் தினவிழா பேச்சு போட்டி நடந்தது.
- 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்றது. 'பெண் குழந்தைகளை காப்போம்', பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. 3,4,5,6,7,8 வகுப்புகளை சேர்ந்த சுமார் 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களில் முதல் பரிசு 5 பேரும், 2-ம் பரிசு 5 பேருக்கும், 3-ம் பரிசு 7 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 1-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் வகுப்பு ஆசிரியர் நீலகேசி பரிசுகள் வழங்கினார். அதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
- வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 6-ந் தேதியும், ஜவகர்லால்நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு 7-ந் தேதியும் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டி வேலூர் ஊரீசு கல்லூரியில் நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பு போட்டி அன்று வழங்கப்படும். எனவே வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் மாணவர்கள் பேசுவதற்கு தயார் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- மாணவர்களுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பரிசு வழங்கினார்
- 67 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொறியியல் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் காந்தி வரவேற்றார். இதில் ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 67 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டியிட்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 4 மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத்காந்தி, ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமுர்த்தி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாசன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் கலாநிதி, பானுசந்தர் திலீபன், சேகர் தினேஷ், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.
- இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தேனி:
தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரை போட்டி தேனி அருகே உள்ள வீரபா ண்டியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில மாணவரணி துணை செயலாளர்கள் மதளை செந்தில்குமார், கோகுல் ஆகியோர் தலைமை தாங்கினர். பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணகுமார், தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி, தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன் வரவேற்றார். தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி உள்பட தி.மு.க. நிர்வாகிகள், மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நீட் விலக்கு கோரும் தபால் அட்டையை ஜனாதிபதிக்கு கடிதம் வழியாக அனுப்ப கையெழுத்து அட்டைகள் சேகரிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் கலைஞர் பெற்று தந்த உரிமைகள், மாணவர் நலனில் கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் கலைஞர் காத்த மனிதநேயம், கலைஞர் ஆட்சியில் கல்வி புரட்சி, ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட கலைஞர், பெரியார் அண்ணா வழியில் கலைஞர் என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதேபோல கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் வள்ளுவம் போற்றிய கலைஞர், திராவிடத்தின் எழுச்சி கலைஞர் மற்றும் பேச்சு போட்டியில் இந்திய ஜனநாயகத்தில் கலைஞர் பங்கு, நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர், மகளிர் மாண்பு காத்த கலைஞர், கலைஞரும் சுயமரியாதையும் என்ற தலைப்புகளில் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக தலைமை ஆசிரியர் இளம்பரிதி, பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை, முதுகலை ஆசிரியர்கள் முத்துக்குமார், செல்வம் ஆகியோர் செயல்பட்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் வீரபாண்டி பேரூர் தி.மு.க. செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- நாகர்கோவிலில் வருகிற 31-ந்தேதி நடக்கிறது
- மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நடக்கிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி அக்டோபர் 31-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் தனித்தனியே பேச்சு போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.
பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.
காந்தியடிகள் பிறந்த நாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகளாக பள்ளிகளுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள் ஆகியவையும், கல்லூரிகளுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
கல்லூரி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. பள்ளி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு 3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேது பாஸ்கரா மேல்நிலைப்பள்ளி பேச்சுபோட்டி நடந்தது.
- நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்டரமாணிக்கம் கிராமத்தை சொந்த ஊராகக் கொண்ட டாக்டர் சேது குமணன். இவர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கல்வி நிறு வனங்களையும், கல்லூரிகளையும், வோளாண்மை ஆராய்ச்சி மையங்களை நிறுவி ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன்பு 8 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்விக்கூடம் நாளடைவில் நிறை நிலை மேல்நிலைப் பள்ளியாக மாறியுள்ளது. இன்று 8 ஆயிரம் மாணவர்களை கொண்ட பெரும் கல்வி குழுமமாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளி நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்ட தியாக பெண்மணி வேலு நாச்சியார் குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எழுமின் உலக அமைப்பு நிறுவனர் ஜெகத் காஸ்பர் ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளி தேர்வுகளை எப்படி கையாளுவது குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடந்தது
கன்னியாகுமரி :
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதந்தோறும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக இந்த மாதம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலைஞரும் சங்கத்தமிழும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் ஆசிரியர் சிவதாணு, ஆசிரியை குறமகள் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். போட்டியில் மாணவர் அண்ணாமலை, மாணவிகள் சுப்பிரஜா, ஜியுபிளமிங், ஆஸ்லின் அபீஷ்மா, ஆன்றனி வித்யா ஆகியோர் வெற்றி யாளர்களாக அறிவிக்கப்பட்ட னர்.
தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் "அமரர் கலைஞருக்கு சூட்டும் வெண்பா மலர் 100" என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஓவியர் வை.கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி தலைமை தாங்கினார். பன்னாட்டு தமிழ் உறவு மன்ற இளங்கோ நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். கலைவாசல் அமைப்பின் தலைவர் குமரி எழிலன் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
நூலாசிரியர் கவிமணி தாசன் நற்பணி இயக்கத்தின் பொதுச்செயலாளர் புலவர் சிவதாணு ஏற்புரை ஆற்றி னார். அதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.
முடிவில் ஆசிரியை குறமகள் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- மாணவ-மாணவி களிடையே பேச்சுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 15ந் தேதி காலை 1 0 மணி முதல் நடை பெறவுள்ளது.
- போட்டிக்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட ப்பட்டது.
இவ்வறிவிப்பின்படி நிகழாண்டில் (2023-2024) அண்ணா பிறந்தநாளை யொட்டி கல்லூரி களில் பயிலும் மாணவ-மாணவி களிடையே பேச்சுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 15ந் தேதி காலை 1 0 மணி முதல் நடை பெறவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.
அண்ணாவும் மேடைப் பேச்சும், கடமை, கண்ணியம், கட்டு பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெ ல்லும், ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவ ர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். மேலும், பேச்சு ப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து போட்டி க்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்பு டைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மா வட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
- பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
- பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தமிழ் வளர்ச்சித் துறை யின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகின்ற 4-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் 11- ந் தேதி கலைஞர் பிறந்த நாளை யொட்டி தியாக துருகம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கானப் பேச்சுப் போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற வுள்ளது.
மேலும் பேச்சுப்பேட்டி யில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த தலா ஒரு மாணவருக்கு சிறப்புப் பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள் ளார்.
- போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
- குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட ப்பெற்றுள்ளது.
அவ்வறிப்பின்படி 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் நாள் அம்பேத்கர் பிறந்தநாள்விழா தொடர்பில் கடலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகிற 20-ந் தேதி கடலூர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்கத்தில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள்2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கபடவும் உள்ளன. பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவ ர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சு ப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் நேரில் ,அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 19.07.2023-இக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அம்பேத்கர் பிறந்தநாள்விழா பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் பின்வருமாறு:
பள்ளிகளுக்கான பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் அம்பேத்கரின் இளமை பருவம், பூனா உடன்படிக்கை, அய ல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி, பவுத்தத்தை நோக்கி, அம்பேத்கரும் காந்தியடிகளும், வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரின் பங்கு, இந்திய அரசிலமைப்புச் சட்டம், சமூக நீதி என்றால் என்ன, அரசியலமைப்பின் தந்தை, சட்ட மேதை அம்பேத்கர் கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டிகளின் தலைப்புகள் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய், பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தம்மமும், கூட்டாட்சி கோட்பாடும்,பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அம்பேத்கர் எழுதிய நூல்கள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி, அம்பேத்கரும் பவுத்தமும் பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும்தொடங்கும். இப்போட்டிகளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்